தல அஜித் பிறந்தநாள்..!! காதல் மனைவி கொடுத்த பரிசு..!! படிக்க மறக்காதீங்க..!
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் தல அஜித்குமார் ஒருவர்.., அமராவதியில் அறிமுகமான அஜித்குமார் முதல் படம் அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை.., அதன் பின் தன்னை வருத்திக் கொண்டு உழைப்பால் உயர ஆரமித்தார்..
இவரின் நடிப்பை பார்த்த பல பெண்கள் இவர் மீது காதல் கொள்ள அராம்பித்தனர் அதற்கு காரணம் இவர் நடித்த “காதல் மன்னன்” என்ற படம் தான்.., தன் எதார்த்த நடிப்பாலும் இயல்பான பேச்சாலும் ரசிகர்களை கவர தொடங்கினார்..
குறிப்பாக இந்த பாடல் “உனை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே..” என்ற பாடல பலரையும் கவர தொடங்கியது.., அதன் பின் இவரும் நடிகை தேவயானி நடிப்பில் வெளியான காதல் கோட்டை என்ற படம் 100 நாட்களுக்கும் மேல் ஓடி ஹிட் கொடுத்தது..,
பார்க்காமலே கடிதத்தின் மூலம் காதலிக்க முடியும் என்று ஒரு அழகான காதலை கொடுத்த ஒரு படம் என சொல்லலாம்..,
ஒரு மனிதன் நடிப்பால் ரசிகர்களை கவர்வதால் மட்டுமே அவரை மற்றவர்களுக்கு பிடித்து விடாது.., இன்றும் ஒரு சில நடிகர்களுக்கு 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் அவருக்கு ஒரு பட்டம் கிடைக்கவில்லை.
ஆனால் அஜித்குமார் இவருக்கு மட்டும் “தீனா” என்ற படத்தின் மூலம் “தல” என்ற பட்டம் கிடைத்தது.. குறிப்பாக இந்த வசனம் “தல இருக்கும் போது வாலு ஆட கூடாது“
சிறு வயதில் இருந்தே நடிப்பில் கலக்கி கொண்டிருந்த நம்ப ஷாலினி அஜித்உடன் முதல் முதலாக இணைந்து நடித்த படம் தான் “அமர்க்களம்” திரையில் இவர்கள் இருவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது ..,
சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையில் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கர்கள் எதிர்பார்க்க அவர்களின் காதல் பற்றிய ஒரு அழகான கிசு கிசு வெளியானது., அதை இவர்கள் மறுக்காமல் அவர்களின் காதல் பற்றி வெளியிட்டனர்..,
அதன் ஏப்ரல் 24ம் தேதி 2000ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.., “உன்னோட வாழாத வாழ்வென்ன வாழ்வு” என்று சினிமாவில் பாடிக் கொண்டிருந்த ஷாலினி அஜித் அவர்களை திருமணம் செய்து கொண்டு இன்று வரை காதல் பயணம் செய்துக்கொண்டிருக்கிறார்கள்…
நம்ப காதல் மன்னன்.., மீது பேபி ஷாலினி வைத்திருக்கும் காதலுக்கு அளவே இல்லை என சொல்லாம்.., கடந்த சில நாட்களுக்கு தனது 24வது திருமணநாளை கொண்டாடினார்கள் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது..,
நமக்கு பிடித்தவர்களை பிடித்த பொருளை பரிசாக அழிப்பது மிகவும் அழகாக இருக்கும் அந்த வகையில் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் அஜித் அவர்களுக்கு காதல் மனைவி ஷாலினி 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்..,
இந்த பைக் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என சொல்லலாம்.., காரணம்., இந்த பைக்கின் எடை 193.5 கிலோ. 1,180 மில்லி மீட்டர் நீளமும், 2,105 மில்லி மீட்டர் அகலமும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது..,
அஜித் ரீல் லைப் – ரியல் லைப் :
வீரம் படத்தில் இவர் பேசிய வசனம் “நம்ப கூட இருக்கவங்கள நம்ப பாத்துக்கிட்ட.., நமக்கு மேல இருக்கவன் நம்பள பார்த்துப்பான்” என்று சொல்லுவது போல.., ரியல் வாழ்க்கையில் அவர் கூட வேலை பார்த்தவர்களுக்கு வீடு கட்டி கொடுத்திருப்பார்..,
ரெட் படத்தில் வரும் இந்த வசனம் “என் போட்டோ வ வச்சி இருக்கவன் என்னைக்குமே தப்பு பண்ணமாட்டான்” என்று சொல்வதை போல நிஜ வாழ்க்கையிலும், ஆட்டோ ஓட்டுநர் இவர் அவரது ஆட்டோவில் பயணம் செய்த நபர் தவற விட்ட பொருட்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்திருப்பார்.., அந்த ஆட்டோவில் அஜித் போட்டோ இருந்து குறிப்பிடதக்கது…,
வீரம் படத்தில் ஒரு காட்சியை போல தன்னை தேடி வருவர்களுக்கு தானே உணவு சமைத்து பரிமாறும் குணம் கொண்டவர்.,
தல அஜித் அவர்களை பற்றி பேச வார்த்தைகள் இருந்தாலும் இன்று நாள் முழுதும் போதாது.., இன்று 53வது பிறந்தநாள் கொண்டாடும் தல அஜித் அவர்களுக்கு ரசிகர்கள் சார்பாகவும் மதிமுகம் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..