“தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருது..” யார் இந்த குமரி அனந்தன்..?
இன்று 78வது சுதந்திர தின விழாவில் தமிழக அரசு சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தகைசால் விருது மற்றும் 10 லட்சம் ரூபாய் காசோலையை” வழங்கி கவுரவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலம் அடுத்த அகத்தீஸ்வரத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி அரிகிருச்சுணன் தங்கம்மாள் அவர்களின் மூத்த மகன் தான் இவர். காமராஜரின் சிசியனாக மட்டுமின்றி அரசியலிலும் அவரோடு சேர்ந்து மக்களுக்காக பாடுபட்டவர்..
இவரின் அரசியல் செயல்பாட்டால் காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவராகவும், காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவராகவும் தலைமை வகிக்கப்பட்டார்..
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டி களக்காடு கிராமத்தில் இருந்து இராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டார்.. அதன் விளைவாக 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார்..
குமரி அனந்தன் 1977ம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. தேர்வு செய்யப்பட்ட முதல் நாளில் இருந்தே தமிழில் பேசுவதற்கு அவையில் பலமுறை நிராகரிக்கப்பட்டும்.., தமிழ் மொழிக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சித்தார்..
ஆனால் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டார். இதுவரை 10 முறைக்கும் மேல் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் அந்த தொடர் முயற்சியால் 1978ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அன்று பேரவையில் தமிழில் பேசுவதற்கு அனுமதி கிடைத்தது,
மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் :
அவரின் அந்த தொடர் முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து “தனிமரம் தோப்பாகாது” என்ற பழமொழியை குமரி அனந்தன் மாற்றி அமைத்து விட்டார்.. என முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பாராட்டினார். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்களில் ஆங்கிலத்தில் இருந்து அனைத்தும் தமிழில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்.
தமிழகத்தில் தாய்மொழி தமிழ்-க்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடடியவரும் குமரி அனந்தன் என்பது குறிப்பிடத்தக்கது..
கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவருக்கு 2021-ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருதை வழங்கினார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியதற்காக முனைவர் குமரி அனந்தனுக்கு 2024ஆம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருதை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..