மீண்டும் தலைதூக்கிய சாதிய கொடுமை..!! நாங்குநேரியில் அரங்கேறிய மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்..!!
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரியை நோக்கி ஒரு இளம் ஜோடி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 3 மர்மநபர்கள் அந்த இளம் ஜோடிகளை வழிமறித்து தகாத வார்த்தைகளாலும் ஆபாச வார்த்தைகளாலும் அவர்களை திட்டியுள்ளனர். மேலும் அந்த இளம் பெண்ணை தொட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் அந்த 3 போதை ஆசாமிகள்..
இதுகுறித்து அந்த இளம் ஜோடிகள் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்., அதன் பேரில் எஸ்ஐ சக்தி நடராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட 3பேரில் ஒருவர் இளம் சிறார் என்பதால் அவரைக் கைது செய்து, சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தி அரசு கூர் நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ள 2பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்..
அரசு கூர் நோக்கு இல்லத்தில் உள்ள சிறார் மற்றும் காவல்துறையால் தேடப்பட்டு வரும் இருவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு நாங்குநேரி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரியை சாதி வன்மத்தால் அவரது வீட்டில் சென்று கொடூரமாக அரிவாளால் வெட்டியவர்கள் என்பதும் தெரியவந்தது..
பள்ளியில் சாதி என்ற பெயரில் பாகுபாடு காட்டியதோடு மாணவன் சின்னதுரையை கடும் வன்மத்தோடு சக மாணவ நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளார்.. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . கடந்த ஆறு மாத காலங்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டு இருந்தார்.. இப்படி ஒரு சூழலில் கூட மாணவன் சின்னத்துரை மருத்துவனையில் இருந்து படித்துக்கொண்டே பிளஸ் டூ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
அதே சமயம் சின்னத்துரையை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள் செய்த தவறை நினைத்துப் வருந்தாமல் இன்னும் ஜாலியாக சுற்றுவதாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.. மேலும் நெல்லையில் ஒரு பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய சந்துரு, கடந்த சில நாட்களுக்கு முன்
கூர்நோக்கு இல்லத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து பேசினேன்.. உங்களது பெற்றோர் ஏதாவது உங்களை கண்டித்தாரா..? என கேட்டேன்.. அதற்கு இல்லையே அவங்க ஏன் திட்ட போறாங்க என பதில் கூறினார்கள்.. பக்கத்து வீட்டு சிறுவர்களிடம் பழகாதே என எச்சரித்தார்களா என கேட்டதற்கு அதற்கும் இல்லை என என்ற பதில் தான் வந்தது.., முன்னாடி இருந்ததை போல தான் இப்பவும் நாங்க இருப்போம் என பதில் அளித்தார்கள்..
சொல்லப்போனால், ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காகவோ., சாதியின் பெயரை சொல்லி மாணவனை தாக்கியதற்காகவோ அவர்களை திருத்த நினைக்காமல் அவர்கள் ஒரு வீரர்களாக பார்க்கிறார்கள்.. அவர்களை கண்டிக்காமல் அவர்களை பாதுகாக்க ஒரு சமுதாயம் இருக்கும் வரை இந்த ஜாதி பிரச்சனை தலையோங்கியே நிற்கும்.. என நீதிபதி சந்துரு வேதனையோடு தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..