சங்கரன்கோவிலில் நடைபெற்ற தென்காசி மாவட்ட மதிமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்தலுக்கு 198 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் மதிமுக உறுப்பினர் சேர்க்கை கடந்த 6. மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் நிறைவு பெற்று தைத் தொடர்ந்து பேரூர், கிளை கழக தேர்தல்கள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஒன்றிய நகர நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்.1, 2 தேதிகளில் நடைபெறும் என தலைமை கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள் தேர்வுக்கு வேட்பு மனுக்கள் சங்கரன்கோவிலில் ஸ்ரீகிருஷ்ணா ஹாலில் பெறப்பட்டன.
இதில் சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஒரு நகரம், 8 ஒன்றியங்களில் 90 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தர். செயற்குழு உறுப்பினருக்கு 108 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்த மாநில மாணவரணி துணைச் செயலாளர் மு.செல்வராஜ், மாநில துணைப்பொதுச் செயலாளர்
தி.மு.இராசேந்திரன், மாநில மருத்துவர் அணிச் செயலாளர் மருத்துவர்.வி.எஸ்.சுப்பாராஜ், ஆகியோர் வேட்பு மனுக்களைப் பெற்றனர்.
Discussion about this post