“தமிழ்ப் புதல்வன் திட்டம்” முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கம்..!! 3.28 லட்சம் மாணவர்கள் பயன்..!!
கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் “தமிழ்ப் புதல்வன் திட்டத்தை” கோவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ள நிலையில் .
தமிழ்நாட்டில் உயர்கல்வியை வளர்க்கும் நோக்கில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரி படிப்பை தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக, 6ம் வகுப்பு மாணவர்கள் முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் செயப்படுத்தப்பட்டுள்ளது..
அதேபோல் பள்ளிபடிப்பு மற்றும் டிகிரி முடித்தும் உயர்கல்வியில் சேர நினைக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, அவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த தமிழ்ப் புதல்வன் திட்டம் துவக்க விழா நேற்று கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.. இந்த திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கினார்.
இதுக்குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வாழ்வில் சில நாட்கள் மறக்க முடியாததாக – வரலாற்றில் நம்மை இடம்பெற வைக்கக்கூடியதாக அமையும். அத்தகைய நாள், #தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட இந்தப் பொன்னாள்!
மாணவக் கண்மணிகளே!
நீங்கள் உயர உயரப் படிக்க வேண்டும். தடைகள் என்பது உடைப்பதற்காகத்தான். உங்களுக்குத் துணையாக –… pic.twitter.com/kCbkXcp7X0
— M.K.Stalin (@mkstalin) August 9, 2024
“வாழ்வில் சில நாட்கள் மறக்க முடியாததாக – வரலாற்றில் நம்மை இடம்பெற வைக்கக்கூடியதாக அமையும். அத்தகைய நாள், தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட இந்தப் பொன்னாள்..!
மாணவக் கண்மணிகளே..! நீங்கள் உயர உயரப் படிக்க வேண்டும். தடைகள் என்பது உடைப்பதற்காகத்தான். உங்களுக்குத் துணையாக – பக்கபலமாக, உங்களது பெற்றோர்கள் மட்டுமல்ல, நாங்களும் இருக்கிறோம்.., என்றும் இருப்போம்” என இவ்வாறு பதிவிட்டுள்ளார்..
மாணவர்கள் கருத்து :
அதன் பின் மாணவர்கள் பேசியதாவது.., தமிழ் புதல்வன் திட்டம் எந்த அளவிற்கு எங்களுக்கு பயன் உள்ளது என்றால் இந்த ஆயிரம் ரூபாய் பணத்தில் எங்கள் தேவைகளை நாங்களே பார்த்துக்கொள்ள முடியும்.., அதுமட்டுமின்றி கல்லூரியில் படிக்கும் 100க்கு 80% சதவிகிதம் மாணவர்கள் பகுதி நேர வேலைபார்த்து படிக்கிறோம் அதன் பின் படித்து முடித்து குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது..
எனவே இந்த 1000 ரூபாய் உதவித்தொகை எங்களுக்கு பலவகையில் உதவுகிறது.., அதனை அளித்த தமிழக அரசிற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..