ADVERTISEMENT
நிலவுக்கு அனுப்பப்பட்ட 3 சந்திரயான் திட்டங்களுக்கும் தமிழர்களே இயக்குநர்களாக இருந்து பெருமை சேர்த்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் -1 திட்டத்துக்கு மயில்சாமி அண்ணாதுரை,
சந்திரயான் -2 திட்டத்துக்கு வனிதா,
சந்திரயான் -3 திட்டத்துக்கு வீரமுத்துவேல் ஆகியோர் திட்ட இயக்குநர்களாக இருந்துள்ளனர்.
3 தமிழர்களின் அர்ப்பணிப்பும் நிபுணத்துவமும் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊக்கம் தருவதாக உள்ளது. தமிழ்நாட்டின் இளைய தலைமுறைகள் 3 விஞ்ஞானிகளை பின்பற்றி இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.