நிலவில் இந்திய தேசிய சின்னத்தை பிரக்யான் ரோவர் பதித்தது.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திராயன்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனம் நேற்று மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. தரை இறங்கிய சில மணி நேரங்களில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவில் கால் பதித்தது.
பிரக்யான் ரோவர் சக்கரங்களில் இஸ்ரோவின் லோகோ மற்றும் நமது தேசிய சின்னம் பதிக்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து நிலவில் இறங்கிய பிரக்யான் ரோவர் இஸ்ரோவின் லோகோ மற்றும் இந்திய தேசிய சின்னத்தையும் நிலவில் பதித்துச் சென்றது. நிலவில் காற்று இல்லை. எனவே இந்த அடையாளம் எப்போதும் இருக்கும். நிலவில் பிரக்யான் ரோவர் செல்லும் இடங்களில் எல்லாம் நமது தேசிய சின்னத்தை பதித்துச் செல்லும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.