சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விமான நிலையத்துக்காக பரந்தூர், மேலேரி, நாகப்பட்டு என 13 கிராமங்களில் 4,791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.இப்பகுதிகளில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பி வாழ்கின்றனர்.
இந்த நிலையில் விமான நிலையம் அமைந்தால், தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கபடும் என இப்பகுதி மக்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பரந்தூர் விமானம் நிலையம் தொடர்பாக இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் வேல்முருகன், சிபிஐ ராமச்சந்திரன், ஆகியோர் கவனத்தை ஈர்த்து பேசினர்.