சென்னையிலுள்ள ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார் அதில் இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று கூறினார்.
ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாநாட்டை முதல்வர் தொடங்கி வைத்த பிறகு முதல்வர் மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட உள்ள திட்டங்களை குறித்து பேசினார். மேலும் அவர் பேசுகையில், மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய இரண்டும் மிக முக்கியமானது அந்த துறைகள் சிறப்பாக செயற்பட்டு வருகிறது அதற்கு அமைச்சர் ம.சுப்புரமணியன் மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார்.
மேலும் அணைத்து அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்காக இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது இதன்மூலம் அரசு மருத்துவமனைகளின் தரம் மேம்படுவதோடு கண்ணொளி காப்பீட்டு திட்டம்,108 ஆம்புலன்ஸ் திட்டம், மற்றும் கலைஞர் காப்பீட்டு திட்டம் செயப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோல்டன் ஹவர் என்ற திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு 48 மணிநேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்க 1 லட்சம் ருபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் பயன்பெற 17,14,000 நபர்கள் இதுவரை பரிசோதனை செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும், 100% பிரசவங்கள் மருத்துவமனையிலேயே நடைபெறுகிறது இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது மற்றும் உடலுறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தமிழ்நாடு உலக அளவில் முன்னிலை வகித்து வருகிறது. சமீபகாலமாக னாய் எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகம் ஏற்படுவதால் அதை சரி செய்வதற்கு வல்லுனர்களிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மக்களை தேடி மருத்துவம் திட்டம் தற்போது 1 கோடி என்ற இலக்கை எட்டியுள்ளது. என்று முதல்வர் ஸ்டாலின் மருத்துவ மாநாட்டில் உரையாற்றினார்.