இன்று ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். ஜி 20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலியில் நவம்பர் 15 மற்றும் நவம்பர் 16ம் தேதி நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றுள்ளார்.
உலகில் முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அமெரிக்கா,ரசியா, உட்பட பல முக்கிய நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு மாநாட்டில் காரோண பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உக்ரைன் ரசியா இடையேயான போர் குறித்து விவாதிக்க பட உள்ளது. மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை இந்தோனேசியா பிரதமர் அதிபர் ஜோக்கோ விடோடோ வரவேற்றார்.
பின்னர், அமெரிக்கா அதிபர் ஜோ பைடேனை சந்தித்து இருவரும் கை குலுக்கிக்கொண்டனர், அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசினார். இது குறித்தான புகைப்படத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.