கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், காவல் துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது அதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வு தொடர்பான விசாரணை மேற்கொள்ள நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கபட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த 18ம் தேதி சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் குற்றம் செய்தவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், சம்பவத்தின் போது பணியிலிருந்த காவல் ஆய்வாளர் திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது,காவல் ஆய்வாளர் திருமலை நெல்லை மாநகர சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் சம்பத்தில் சம்பந்தப்பட்ட சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவளித்துள்ளார்..