கடந்த வாரம் காரைக்காலில் இருந்து கடலில் தங்கி மீனவர்கள் மீன் பிடிப்பதாற்காக பத்து மீனவர்கள் கடலுக்குள் சென்றிருந்தனர். இந்நிலையில் கோடியக்கரை – ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இந்தியா கடற்படை விசைப்படகு இருந்த தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேல் (32) என்பவருக்கு இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் துளைத்தது அதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை தொடர்ந்து உச்சப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை முகாமிற்கு இந்தியா கடற்படை தகவல் அளித்ததை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் அவர் முதலுதவிக்கு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அதன்பின் சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். முதலில் உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டினை அகற்றுவதற்காக தீவிர சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. மற்ற 9 மீனவர்களை இந்திய கடற்படையினர் மீன்பிடி படகில் வைத்துள்ளனர்.இது குறித்து இந்திய கடற்படை கூறுகையில், எல்லை தாண்டி செல்ல முற்பட்டதால் அவர்களின் படகுகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியாக கூறியுள்ளது .இதை குறித்து தகவலறிந்த இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவருக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.