தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில், விஜய் பாடிய பாடலின் சில வரிகள் இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் வாரிசு படக்குழுவிற்கு நடிகர் விஜய் கடும் டோஸ் விட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தன் படத்தில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்காக வாரிசு படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார். ரகசியமாக பாடிய இப்பாடல் படப்பிடிப்பு தளத்திலிருந்து கசிந்து வைரல் ஆனது. சுமார் 15 வினாடிகள் விஜயின் குரலில் வரும் அப்பாடல் பெரும் வரவேற்பைபெற்றது. ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பாடல் கசிந்தால் நடிகர் விஐய் படக்குழுவிடம் அதிருப்தி தெரிவித்ததாகவும், மிக கோவமாக திட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, வாரிசு படத்திற்காக ஒதுக்கபட்ட நாட்கள் முடிந்தும் படப்பிடிப்பு நிறைவடையாமல் இருந்ததால் மேலும் 40 நாட்கள் கூடுதலாக இயக்குனர் கேட்டிருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவத்தால் விஜய் அப்செட் ஆகா உள்ளார் என்று கூறபடுகிறது.
வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்தான ஆப்டேட் தீபாவளி அன்று வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.