“உச்சநீதிமன்றத்தின் உள் ஒதுக்கீடு தீர்ப்பு கிரிமிலேயர்” தொல்.திருமாவளவன் அதிரடி..!!
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கிட வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் உள் ஒதுக்கீடு தீர்ப்பில் கிரிமிலேயர் வரையறையை திணிக்கும் திட்டத்தை எதிர்த்து ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும், அரசு பணிகளில் காலியாக உள்ள பின்னடைவு பணியிடங்களை தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக பொதுச்செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை. ரவிக்குமார், விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் மு. பாபு, துணைப் பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, எழில் கரோலின், முதன்மைச் செயலாளர் ஏ சி பாவரசு, தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம்பி பேச்சு :
அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம்.. போதை பொருள் ஒழிப்பு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு முன்மொழிய உள்ளோம் இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக பரப்புரை மேற்கொள்ள உள்ளேன்..
தமிழர் எழுச்சி நாளில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு முன்மொழிவதுண்டு.. கடந்த முறை சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை என்ற கரு பொருளையும்
அந்த வகையில் இந்த ஆண்டு மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்ற பெயரில் கருப்பொருளை மையாமக கொண்டு முன்மொழிய உள்ளோம்.. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக பரப்புரை மேற்கொள்ள உள்ளேன்..
இதற்கு முன்பு வள்ளுவர் கோட்டத்தில் விஷச்சாராயம்எதிராக நடத்திய போராட்டத்தின் போது மது ஒழிப்பு மகளிர் மாநாடு செப் 17 பெரியார் பிறந்தநாள் அன்று நடத்த போவதாக அறிவித்திருந்தோம் .
ஆனால் தற்போது அக்டோபர் 2 காந்தியடிகள் பிறந்தநாளன்று நடத்தப்போவதாக முடிவு செய்துள்ளோம்..
தலித் சமூகத்தில் மட்டுமல்ல மொத்தமாக எந்த சமூகத்திலும் ஆணவக் கொலைகள் கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கை.. எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டில் கொண்டு வருவது தான் நாடு முழுவதும் இன்று பேசுபொருளாக உள்ளது
இட ஒதுக்கீடு :
ஒரு குடும்பத்தில் ஒருவர் அரசு அலுவலக உதவியாளர் பதவி கிடைத்தால் அந்த குடும்பத்தில் வேறு யாருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்வதுதான் இந்த தீர்ப்பு. ஒரு தலைமுறை படித்தால் போதும் வேறு யாரும் முன்னேறக்கூடாது என்பதை மறைமுகமாக சொல்கிறது இந்த தீர்ப்பு…
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசுபவர்கள், தலித் மக்கள் மீது அக்கறையில் சொல்கிறார்களா இல்லை..? வேறு காரணத்திற்காக சொல்கிறார்கள் என்று நாம் உற்று பார்க்க வேன்டும்
சாதி கொடுமைகள் பற்றி பேசும் போது, உங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா என முன்னேறிய சமூகத்தினர் பேசி திசை திருப்பி விடுகின்றனர்.
எஸ்சிஎஸ்டிக்கு கிரீமி லேயர் :
தூய்மை பணியாளர் வேலை வேலை செய்பவர்கள் ஆண்டுக்கு 10 லட்சம் வருமானம் பெறக்கூடியவர்கள் என்றால் இந்த கிரீம்ல ஏர்முறையால் அவர்களின் பிள்ளைகளும் பாதிக்கப்படுவார்கள்..
10 புள்ளி 5 சதவீதம் இடஒதுக்கீடு அரசியல் லாபத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் இட ஒதுக்கீடு அறிவிப்பினை வெளியிட்டார்… OBC மக்களுக்கான கிரீமி லேயர் வருமான வரம்பு 8 லட்சம் ஆக உள்ளது.. ஆனால், இதை பற்றியெல்லாம் யாருக்கும் கவலை இல்லை..ஆனால், திருமாவளவன் என்ன செய்கிறார் என்பது குறித்தே கவலை படுகிறார்கள்..
பல்வேறு கட்சிகள் வரும் போகும், ஆனால், ஒரு தலித்தை முதல்வராக எந்த காலத்திலும் ஆக்க முடியாது.. 10.5 சதவிகிதம் வன்னியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு தரவுகள் இல்லை ஆகையினால் இட ஒதுக்கீடு கொடுக்க முடியவில்லை ..
OBC சாதிவாரி கணக்கெடுப்பு :
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கூறுவது SC, ST மக்களுக்காக அல்ல, OBC மக்களுக்கான தரவுகள் இல்லை எனவே சாதிவாரி கணக்கெடுப்பு OBC மக்களுக்கானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பது எஸ்சி எஸ்டி க்காக அல்ல ஓ.பி.சி.க்காக ஆதரிக்கிறோம்..
வருமான அடிப்படையில் இட ஒதுக்கீடு எம்ஜிஆர் கொண்டு வந்தார். எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் பொழுது இரட்டை இலை சின்னம் தோற்றுப் போனது என்றால் வருமான வரம்பு அடிப்படையில் இட ஒதுக்கீடு தான் காரணம். தோற்ற பிறகு இந்த அரசாணையை திரும்ப பெற்றார் எம்ஜிஆர்.
உள் ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சாதிவாரி இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் கிரிமிலேயர் ஆகிய இரண்டும் தான் இங்கே மிக முக்கியமான பிரச்சனைக்குரியது என்பதை நாம் உணர வேண்டும்..
தமிழ்நாடு அருந்ததியர் :
தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கும் ஆந்திராவில் வழங்கப்படும் உள் ஒதுக்கீட்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு வழங்கப்படுவது (சப் கோட்டா) ஆனால் ஆந்திராவில் வழங்கப்படுவது (சப் கிளாஸ்)
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 35 கோடி எஸ்.சி., எஸ்.டி மக்கள் உள்ளனர். வெறும் 35 லட்சம் பேருக்கு பிரபாகரன் தனிநாடு கோரிக்கைவிடுத்தார். இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள்தான் கிரிமீலேயர் முறையையும், பொருளாதார இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்த முயல்கிறது.
தமிழ்நாட்டில் முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆந்திராவில் இட ஒதுக்கீடு உள்ள தொகுதி தொகுதியாக பங்கீடு. ஆரம்பக் காலங்களில் எனது அருகே இருந்தவர்கள் படிப்பில் பின்தங்கியவர்கள். அதனால் தான், அதற்கேற்றார் போல அப்போது வாசகங்கள் எழுதப்பட்டன.
விசிக கோட்பாடு :
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தலித் மக்கள் எவ்வாறு சிதறடிக்கப்படுவார்கள்.
விசிகவிற்கு சமூகநீதி குறித்து பாடமெடுக்க தேவையில்லை. ஜனநாயகம் குறித்து அறிவுரை கூட தேவையில்லை. சாதி ஒழிப்பு தான் விடுதலை சிறுத்தைகளின் அரசியல் கோட்பாடு. இந்த இலக்கை அடைய முடியுமா முடியாதா என்பது தெரியவில்லை ஆனால் அந்த நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் என் பின்னால் வாருங்கள்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..