ஆயிரம் கிலோவுக்கு மேல்.. பீடி இலையை இலங்கைக்கு கடத்திய 2 பேர்..!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேசுராஜ் மற்றும் ராஜு. மீனவ தொழில் செய்து வரும் இவர்கள், கடந்த 11-ஆம் தேதி அன்று, வாடகை படகு மூலமாக கடலுக்குள் சென்றுள்ளனர்.
அப்போது, நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை எல்லைக்குள் இலங்கை எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும், அவர்களது படகில் சோதனை நடத்தியபோது, 2 ஆயிரத்து 689 கிலோ அளவிலான, பீடி இலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர்களை கைது செய்த கடற்படை அதிகாரிகள், பீடி இலைகளையும், படகையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான தகவல், தற்போது வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்