அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மற்றும் சேகர்பாபுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..?
சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மற்றும் சேகர்பாபுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை டெங்கு மலேரியாவை போல ஒழிக்க வேண்டுமென கூறினார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்தின் 25,26 பிரிவுகள் முரணானது என அறிவிக்க வேண்டும் என்றும், சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு விடுதலை புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்பு நிதி வழங்கியதா என்பதை சி.பி.ஐ. விசாரிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கும், சி.பி.ஐ.க்கும் உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சனாதன சர்ச்சை விவகாரத்தில், தலையிட விரும்பவில்லை என்றும் இதில் உயர்நீதிமன்றத்தை ஏன் நாடக்கூடாது என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதனை தொடர்ந்து சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பற்றி தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..