அண்ணா குறித்து பேசியதற்கு நான் மன்னிப்பும் கேட்க மாட்டேன்.., யார் காலிலும் விழ மாட்டேன்..!!
அண்ணா குறித்து அவதூறாக பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். மற்றும் அதிமுக முன்னால் முதலமைச்சர் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராகவும் ஏற்று கொள்ள மாட்டேன் என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.., அப்போது பேசிய அவர், என்னை பொறுத்தவரைக்கும் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை. தமிழக பாஜவுக்கும் பிரச்னை உள்ளதா..? என்றால் இல்லை. எந்த பிரச்னையும் இல்லை. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
அதிமுக தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கா..? இருக்கலாம். அது எனக்கு தெரியாது.., ஏன்னா அவர்கள் பேசுவதை வைத்து நான் சொல்றேன்.
எனக்கு யாருடனும் பிரச்னை இல்லை. பாஜகவை பொறுத்தவரை நாங்கள் மோடி கட்சி. மோடி எங்கள் தலைவர். மோடியை முன்னிலைப்படுத்தி 3வது முறையாக தேர்தலில் நிற்கிறோம்.
இந்த கூட்டணியின் மையப்புள்ளி பிரதமர் மோடி. மோடியை யாரெல்லாம் “பிரதமரை வேட்பாளராக” ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் இந்த கூட்டணியில் இருக்கிறார்கள்.
எங்களுடைய வெற்றியே மோடிதான். அதை அதிமுகவும் ஏற்றுக்கொள்வார்களா..? என்றால் ஏற்றுக்கொள்வார்கள். இன்னைக்கு (நேற்று) செல்லூர் ராஜூ சொல்லியிருக்கிறார். மத்தியில் பிரதமராக மோடியும், மாநிலத்தில் எடப்பாடியையும் பாஜக அறிவிக்க வேண்டும் என.., அதை எப்படி ஏற்று கொள்ள முடியும்.
அதை தேசிய தலைவர்கள்தான் அறிவிக்க வேண்டும்.., நான் யாரையும், எங்கேயும் தவறாக பேசவில்லை. என்னுடைய தன்மானத்தை கேள்விக்குறியாக்கும் போது நான் பதில் பேசுவேன்.
நாளைக்கு காலையும் பேசுவேன். நாளை மறுநாளும் பேசுவேன். அடுத்தவாரமும் பேசுவேன். தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்ய நான் வரவில்லை. எனது தன்மானத்தை கேள்விக்குறியாக்கும் போது பதில் சொல்ல வேண்டியது என் கடமை மட்டுமல்ல. அது எனது உரிமையும் கூட
செல்லூர் ராஜூ கேட்கும் கேள்விகளுக்கு நான் ஏன்..? பதில் சொல்ல வேண்டும்.. அந்த அவசியமும் எனக்கு கிடையாது அதற்கு தேசிய தலைமையோ, தேசிய தலைவரோ பதில் சொல்லுவார்கள்.
அதிமுக மூத்த தலைவர்கள் இரண்டு மூன்று நாட்களாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அதற்கு என்டிஏ மீட்டிங் இருக்கு.
எடப்பாடி அதில் கலந்துகொள்ள உள்ளார்.., பிரதமர் இருக்கிறார். எங்களது தேசிய தலைவர் இருக்கிறார். அவர்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்துமே வேறு வேறு சிந்தனையில் உள்ளவர்கள். எனவே முட்டல் மோதல் வருவது சகஜம்.
யாரும் யாருடைய காலிலும் விழ வேண்டிய அவசியமில்லை. அந்தந்த கட்சிகள் தனித்தன்மையோடு நிற்க வேண்டும். அறிஞர் அண்ணா அவர்களை எங்கேயும் தரை குறைவாக நான் விமர்சித்தது கிடையாது. அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. நான் பேசியது தவறு என கூற முடியாது.
தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் தலைவராக இருக்கிறேன். அதை சொல்லித்தான் நான் வந்தேன். எனவே இயற்கையாக சில முட்டல் மோதல்கள், சில இடங்களில் பேச்சுகள் வருவது சகஜம்தான்.
அதை பெர்சனலாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. அதிமுகவினர் எதிர்க்கிறார்கள் என்பதால் இறங்கிலாம் போக முடியாது.
சனாதன தர்மத்ததை எப்படி பாஜக மக்களிடம் ஆக்ரோஷமாக பேசுதோ, அதை அதிமுக பேச வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. அது அவர்கள் கொள்கை. அவர்கள் முடிவு. அவர்கள் சரித்திரம். அவர்கள் சனாதனத்தை வேறு மாதிரி பே சுவார்கள். செய்தியாளர்கள் முன் அண்ணாமலை பேசினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..