ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி இரவு ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஒரு மாத பரோல் விடுப்பில் பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, அவருக்கு இது வரை பத்துக்கும் மேற்பட்ட முறை அவருக்கு பரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று(மார்ச்.09) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.