விஜய்யின் 66-வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய். நெல்சன் இயக்கத்தில் விஜய், செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது.
இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் பிரபல இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி 66வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக முன்னணி நடிகையாக வளம் வரும் ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.