உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலியாக சமையல் எண்ணெய் வில்லை லிட்டருக்கு ரூ.40 ஆக உயர்ந்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, இந்தியாவில் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் உள்பட சமையல் எண்ணெய் தேவையை ரஷ்யா, உக்ரைன் நாடுகள் 80 சதவீதத்திற்கும் மேல் பூர்த்தி செய்து வந்தன.
தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லிட்டர் ₹140க்கு விற்ற சூரியகாந்தி எண்ணெய், தற்போது லிட்டருக்கு ₹40 அதிகரித்து ₹180 என விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ₹130க்கு விற்ற பாமாயில் ₹160 எனவும், நல்லெண்ணெய் ₹230 எனவும், தேங்காய் எண்ணெய் ₹245 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடைகளில் சமையல் எண்ணெய் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.