விண்வெளியில் சிக்கி தவித்துவரும் சுனிதா வில்லியம்ஸ்..!! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
விண்வெளியில் சிக்கி தவித்துவரும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் ஆகியோருக்கு உடல் ரிதியாக பல பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திய வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு சென்றனர். மேலும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு பணிகளை முடித்து கொண்டு கடந்த 13ம் தேதி ஊமிகு திரும்பும் வகையில் பயணத்திட்டம் வரையறுக்க பட்டிருந்தது. ஆனால் சில தொழில் நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்பும் பயணம் ஒத்திவைக்கபட்டது.
தொடர்ந்து 26ம் தேதி அவர்கள் பயணித்த ஸ்டார் லைன் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் தற்போதும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் பூமிக்கு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து சரியாக 7 நாட்களுக்குள் விண்வெளி மையத்தில் தங்கி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திட்டம் 50 நாட்களை கடந்துள்ளது.
இந்நிலையில் இருவரையும் மீண்டும் பூமிக்கு அழைத்துவர நாசா முயற்சித்து வருகிறது. மேலும் விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்தாலும் இருவரும் உடல் ரீதியாக பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாததால் இயல்பாகவே உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இப்படி இருக்க அதிக நாட்களுக்கு விண்வெளியில் இருப்பது உடலில் பல மாற்றங்களுக்கு வழி வகுக்கின்றன எனவும் புவி ஈர்ப்பு விசை இல்லாததன் காரணமாக உடலின் தசை நார்கள் மற்றும் எலும்புகள் விரைவில் வலுவிழக்கின்றன எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் புற்றுநோய் வருவதற்கான பல சாத்திய கூறுகள் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். இந்நிலையில் உடல் ரீதியாக ஏற்படும் இந்த மாற்றங்களை புரிந்து கொள்வது சந்திக்கும் சவால்களை கையாள உதவும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த விண்கலம் எங்களை பூமிக்கு கொண்டு சேர்க்கும் என்பதை நான் நம்புகிறேன். எந்த பிரச்சனையும் இல்லை என்ற நல்ல உணர்வு என் இதயத்தில் இருக்கிறது என்று சுனிதா கூறியது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..