தமிழக மீனவர்கள் இந்திய நாட்டின் குடிமக்களா..? இல்லையா..? ராஜ்யசபாவை அதிர வைத்த வைகோ..!!
ராஜ்யசபாவில் இன்று காலை உறுப்பினர்கள் பிரச்சனைகளை குறித்து ஆலோசித்தனர். அப்போது பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது., கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கூட தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடதத்தப்பட்டது. அதில் நமது இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர், தமிழ்நாட்டு மீனவர்களிடம் இன்றைய போட்டியில் இலங்கை தோற்றுவிட்டால் உங்கள் தலைகளை வெட்டுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர்.
அதனால் அந்தப் போட்டியில் இலங்கை தோற்றுப் போனது. அன்றே தமிழ்நாட்டு மீனவர்களை கொலை செய்து தலையை துண்டித்த இலங்கை கடற்படையினரால் இதுவரை 878 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டும்., படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர். கடந்த வாரம் கூட இலங்கை கடற்படை., தமிழக மீனவர்களைத் தாக்கி படுகொலை செய்துள்ளது. இலங்கை தமிழக மீனவர்கள் இடையேயான இந்த பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தேன்.
அப்போது, இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டமென பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்தோம்., பிரதமர் மோடியும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் இந்திய நாட்டின் குடிமக்களா..? இல்லையா..? என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தமிழக மீனவர்கள் இந்தியாவின் குடிமக்கள் என்றால் தமிழக மீனவர்களின் இந்த நிலையை ஏன் கொடுக்கிறீர்கள், உங்கள் கடற்படை என்ன செய்து கொண்டிருந்தது..? என இவ்வாறு வைகோ பேசினார்.
வைகோ தமது பேச்சை முடிக்கும் முன்னரே அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனாலும் வைகோ சில நிமிடங்கள் தொடர்ந்து தமது கருத்தை முன்வைத்தார். இந்த கருத்துகள் சபைக் குறிப்பில் இடம் பெறாது என சபை தலைவர் தெரிவித்தார். இதனால் ராஜ்யசபாவில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..