தமிழ்நாட்டின் பிரபலமான பாம்பன் பாலத்தில் திடீரெனெ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆகையால் அங்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் ராமேஸ்வரம் ரயில் சேவை இந்தியாவில் மிகவும் பிரபலமானது. அந்த பாலத்தில் திடீரெனெ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ராமேஸ்வரம் மாற்று மதுரை இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், எழும்பூர்- ராமேஸ்வரம் மற்றும் குமரி -ராமேஸ்வரம் இடையேயான ரயில்கல் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவைகள் நிருத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், பண்டிகை காலங்கள் என்பதால் ராமேஸ்வரம் செல்லும் ரயில் பயணிகளுக்கு சிக்கலாக உள்ளதால் இந்த கோளாறை விரைவில் சரி செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.