சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் இந்தியா ராணுவ வீரர்கள் 16 உயிரிழந்தாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா ராணுவ வீரர்கள் சிக்கிம் மாநிலத்தில் உலா சாட்டன் என்ற இடத்திலிருந்து தங்கு என்ற இடத்திற்கு வாகனம் ராணுவவாகனம் மூலம் சென்றுள்ளனர். இந்நிலையில், அந்த வழியில் இருந்த பள்ளத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் ராணுவ வீரர்களில் 4 பேருக்கு காயமும் 16 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை இந்திய ராணுவம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
16 ராணுவ வீரர்கள் உயிரிழந்த தகவல் தெரிந்தவுடன் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து விரைவில் விசாரணை தொடங்கும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.