உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 10வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், ஆப்ரேசன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகள் வழியாக அழைத்து வரப்படுகின்றனர்.
உக்ரைனில் உள்ள சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள் உயிரை பணயம் வைத்து எல்லை நோக்கி நடந்து செல்லப்போவதாகவும், எங்கள் உயிருக்கு நிறைய ஆபத்துகள் உள்ளது. நாங்கள் நிறைய காத்திருந்துவிட்டோம், இனி மேலும் காத்திருக்க முடியாது எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என மாணவர்கள் தெரிவித்திருந்த வீடியோ வெளியாகியிருந்து.
இந்நிலையில், ல்லையை நோக்கி செல்வது ஆபத்தானது என்பதால் உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்களை மீட்டு தாயகம் அழைத்துவர, 4 மத்திய அமைச்சர்களை நியமனம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.