ADVERTISEMENT
“ஆல்காட் தேவாலயத்தில் சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா”
வேலூர் மாவட்டம் ஆல்காட் தேவாலயத்தில் தென்னிந்திய திருச்சபை சார்பில் சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் விருதம்பட்டில் உள்ள ஆல்காட் தேவாலயத்தில் சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா தென்னிந்திய திருச்சபை பேராயர் சர்மா நித்யானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயர் மேனன், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை தலைவர் சங்கர், கலைஞர் கண் மருத்துவமனை இயக்குநர் முகமது சயீ, இந்து சமய ஆன்மீகவாதி பர்குணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று ஏசு கிறிஸ்து குழந்தையாக அவதரித்ததை தத்ரூபமாக நடித்து காட்டிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் கேக் வெட்டி சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழாவானது கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.