12ஆம் வகுப்பு மாணவி பெட்ரோலை குடித்து தற்கொலை முயற்சி…
மயிலாடுதுறையில் 12ஆம் வகுப்பு மாணவி பெட்ரோலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் நலத்துக்குடி கீழ உடையார் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகள் சுலோச்சனா. இவர் தருமபுரத்தில் அரசு உதவிபெறும் ஸ்ரீ குரு ஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சக மாணவி ஒருவரின் பேனாவை காணவில்லை என்றும் சுலோச்சனா கடைசியாக வகுப்பறையில் இருந்து வந்ததால், அவர் தான் பேனாவை திருடிவிட்டதாக சக மாணவிகள் வகுப்பு ஆசிரியரான அகிலாண்டேஸ்வரியிடம் புகார் தெரிவித்தனர்.
ஆனால், ஆசிரியரும் விசாரிக்காமல் சுலோச்சனாவை கண்டித்துள்ளார். அதற்கு மாணவி தான் பேனாக எடுக்கவில்லை என்று ஆசிரியரிடம் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளச்சலுக்கு ஆளான மாணவி பெட்ரோலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மாணவி சுலோச்சனாவை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.