”வலிமையான சவால்கள்..” முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…!!
காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி தன்னுடைய 78வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக வலைதளம் பக்கங்களில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்., இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் “காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் திருமதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சோனியா காந்தி. வலிமையான சவால்களை வழிநடத்துவது முதல் கருணையுடன் வழிநடத்துவது வரை, அவரது பயணம் பின்னடைவு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது. அவர் வெற்றியும் அமைதியும் நிறைந்த நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்த்துகிறேன்” என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..