தெற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியா பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை காரணமாக தமிழகம் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இறந்து நாட்களுக்கு முன் வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி நிலை கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் கறையை கடக்கும் என்றும் இதனால் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை காரைக்காலில் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.