கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த உலகமே கொரோனா பிடியில் சிக்கி கொண்டு தற்போது தான் படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் பரவல் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் எரிக் ஃபெய்கல்-டிங் கூறியிருப்பது மீண்டும் கொரோனா மீதான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உருவாகிய கொரோனா 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவியது இதனால் உலகமே தனிமைப்படுத்தி கொள்ள ஊரடங்கை அமல் படுத்தியது. இந்த கொரோனவால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல மருத்துவமனைகளில் இன்னும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வின் தீவிரம் கடந்த ஆண்டுதான் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது அதனால் இந்தியா உட்பட உலகநாடுகள் அதனை ஊரடங்கை தளர்த்தி இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் அதன் பரவல் அதிகமாகியுள்ளதாக உலக பத்திரிகைகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொற்றுநோயியல் நிபுணர் எரிக் ஃபெய்கல்-டிங் கூறுகையில், அடுத்த மூன்று மாதங்களில் சீனாவில் 60 சதவீத மக்களுக்கும் உலகளவில் 10% மக்களும் கொரோனா ஒமைக்ரான் பி.எஃப்.7 வகையால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.மேலும், வரும் ஆண்டில் மிக பெரிய கொரோனா அலையால் உலகம் பாதிக்கப்படும் என்றும் இதனால் உயிரிழப்புகளும் பலமடங்கு உயரம் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் சீனாவில் நவம்பர் 19 முதல் 23-ம் தேதி வரை 4 பேர் மட்டுமே கரோனாவால் உயிரிழந்ததாக பெய்ஜிங் மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மையில் அங்கு உயிரிழப்பு அதிகமாக உள்ளது. பெய்ஜிங் நகரில் கரோனாவால் உயிரிழப்போர் குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய சுகாதாரதுறை அமைச்சகம் பல வழிமுறைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post