எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் விண்ணுக்கு செல்லும் தேதி ஒத்திவைப்பு..!!
புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதுதொடர்பான சோதனைகளையும் படிப்படியாக நிகழ்த்தி வருகிறது. இதனை தொடர்ந்து வெள்ளிக் கோளை ஆய்வு செய்யும் சுக்ரயான் திட்டத்தையும் இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது.
இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. சுமார் 175 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளின் ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இது மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது. சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வரிசையில் கடைசி ஏவுகணை இது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்த இந்த ராக்கெட் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வரிசையில் கடைசி ஏவுகணை இது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..