அமரன் மேக்கிங் வீடியோ வெளியீடு.. எகிறிய எதிர்பார்ப்பு..!
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் ஆக்சன் மேக்கிங் வீடியோ ஒன்றை சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் அடிக்கும் விதமாக இந்த வீடியோ சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக தீவிரவாதிகளை எதிர்த்து சண்டை போடுவதும், காஷ்மீர் மக்கள் தீவிரவாதிகளால் படும் துன்பங்களையும் துயரங்களையும் காட்டியுள்ளனர். குண்டுவெடிப்பு காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டு நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.
இந்த படத்துக்காக சிவகார்த்திகேயன் எந்த அளவுக்கு மெனக்கெட்டு உடல் உழைப்பை போட்டுள்ளார் என்பதை காட்டும் விதமாகவும் இந்த வீடியோ அமைந்துள்ளது. வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாறு படமாகவே இந்த அமரன் படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”