இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் தேர்திருவிழா கோலாகலமாக தொடங்கியது
இலங்கை யாழ்பாணத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நல்லூர் கந்தசாமி கோயிலில் தேர்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
இவ்விழாவை தொடக்கி வைக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இலங்கை சென்றார்.
அங்கு அவருக்கு இலங்கை இந்திய தூதரகம் திருக்கேதீஸ்வரம் திருப்பணி சபை, அகில இலங்கை இந்து மகா மன்றம் சார்பில், பூரணகும்பம் மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட தருமபுரம் ஆதீனம் இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசாமி கோயிலில் நடைபெறும் தேர் திருவிழாவை தொடக்கி வைத்து வழிபாடு மேற்கொண்டார்.
இதில் நல்லை ஆதீன குருமகா சந்நிதானம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post