இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்..!
இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காண சம்பந்தன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டுள்ளார். திரிகோணமலையின் எம்.பியான இவர், கடந்த 25 ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தார்.
தமிழர்களின் தனிநாடு கோரிக்கை நிறைவேற வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து, ராஜ்பக்சே, மைத்ரிபால சிறிசேனா மற்றும் ரணில் விக்கிரமசிங்கே போன்ற அதிபர்களுடன் சேர்ந்து அரசியல் பயணங்களை மேற்கொண்டு வந்தார். சர்வதேச அளவில் நடைபெறும் இலங்கை தமிழர்கள் தொடர்பான கூட்டங்களில், முக்கிய பிரதிநிதியாகவும் இரா. சம்பந்தன் பங்கேற்றுள்ளார்.
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பியுமான இரா. சம்பந்தன் உடல் நலக்குறைவால் காலமமானார். கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
– லோகேஸ்வரி.வெ