தயிர் சான்வெட்ஜ் தயார் செய்யலாமா..!
தேவையானப் பொருட்கள்:
-
பிரட் – 4 பீஸ்
-
கேரட் – 1/4 கப்
-
சோளம் – 3/4 கப்
-
உப்பு – தேவையான அளவு
-
கோஸ் – 3/4 கப்
-
குடைமிளகாய் – 1/4 கப்
-
மிளகு தூள் – தேவையான அளவு
-
சர்க்கரை – 2 ஸ்பூன்
செய்முறை:
-
தயிரில் உள்ள தண்ணீரை வடிக்க ஒரு துணியில் தயிரைக் கொட்டி அதை முடித்து 2 மணி நேரம் வைக்க வேண்டும்.
-
வடித்த தயிரை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் காய்கறிகளை போட்டு பின் சர்க்கரை, உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளற வேண்டும்.
-
பிரட்டை இரண்டு பக்கமும் நெய் சேர்த்து டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
பின் பிரட்டின் ஒரு பாதியில் இந்த கலவையை தடவ வேண்டும் மற்றொரு பிரட்டை கொண்டு மூட வேண்டும்.
-
இப்போது சுவையான தயிர் சான்வெட்ஜ் தயார்.