ஏழைகளுக்கான சிறப்பு ரயில்.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!
வண்டி எண் – 12083/ 12084
கோவை – மயிலாடுதுறை – கோவை ஜன் சதாப்தி அதிவிரைவு வண்டி
கோவை – 07:15 (காலை) 21:15
இருகூர் – 07:29. 20:29
திருப்பூர் – 07:53. 20:03
ஈரோடு – 08:38. 17:18
கரூர் – 09:28. 18:23
திருச்சி – 10:50. 16:45
தஞ்சாவூர் – 11:48. 15:53
பாபநாசம் – 12:11. 15:29
கும்பகோணம் – 12:23. 15:16
மயிலாடுதுறை – 13:50. 14:50
தமிழ்நாட்டில் ஒடும் ஒரே ஏழைகளின் சொகுசு ரயில். ஆனால் பொதுமக்கள் இன்னும் இந்த ரயிலைப் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.
கோவையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் ஈரோடு கரூர் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்கிறது.
பொதுவாக கோவையில் இருந்து சிதம்பரம் சீர்காழி தஞ்சாவூர் மயிலாடுதுறை காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு செல்ல மிகக் குறைந்த அளவில் பேருந்துகள் உள்ளது. அதிலும் மிக நீண்ட தூரம் செல்வதால் கடுமையான உடல் சோர்வு ஏற்படும்.
கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 500க்கும் மேல் வரை உள்ளது. வழியில் அடிக்கடி சாலையோர கொள்ளை கூடாரங்கள் என்ற வடிவில் உணவகங்களில் நின்று நின்று செல்லும்.
சிங்காநல்லூர் பல்லடம் காங்கயம் வெள்ளகோவில் குளித்தலை திருச்சி பாபநாசம் தஞ்சாவூர் கும்பகோணம் என்று பல இடங்களில் நின்று நின்று செல்லும். ஆனால் சாமானிய மக்கள் இந்த ரயிலைப் பற்றி அறியாத காரணத்தால் இன்னும் பேருந்தில் தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.
நமக்காக பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஏழைகளின் ரதம், மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 100 பேர் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது வெறும் ஆறு மணி நேரத்தில் மயிலாடுதுறை சென்று அடைந்து விடும். கோவையில் இருந்து புறப்படும் அதிவேக ரயில் களில் இது தான் முதன்மையானது.
திருச்சிக்கு பணி நிமித்தமாக செல்பவர்கள் இந்த ரயிலை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் காரணம் வெறும் நான்கு மணி நேரத்தில் திருச்சியை அடைந்துவிடும். சொகுசான இருக்கைகள்.
கழிப்பறை வசதி நேரமும் மின் விசிறிகள் மற்றும் தென்றல் காற்று மூலம் குளு குளு பயணத்தை அனுபவிக்கலாம். மேலும் நியாயமான விலையில் தண்ணீர் பாட்டில் இருந்து உணவு பொருட்கள் வரை அனைத்தும் ரயில்வே மூலம் உள்ளேயே கிடைக்கிறது.
இவ்வளவு வசதிகளும் வெறும் 170 ரூபாய் மட்டுமே. அட ஆமாங்க இந்த ரயிலில் கட்டணம் வெறும் 170 ரூபாய் மட்டும்தான். முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்டதால் மிகவும் தூய்மையாக இருக்கும்.
இந்த ரயிலில் பயணிக்க முன்கூட்டியே நாம் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். கடைசி நேரத்தில் பயணிக்கக்கூடியவர்களுக்கும் ரயில் புறப்படும் 30 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
கோவை, இருகூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்கிறது ஆனாலும் பேருந்தை விட இரண்டு மடங்கு முன்கூட்டியே சென்று சேர்கிறது.
மதியம் மயிலாடுதுறை சென்று அடைந்த பிறகு மீண்டும் ஒரு மணி நேர இடைவெளியில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணி அளவில் கோவைக்கு வந்து சேர்கிறது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மதியம் 2 மணி வரை இந்த ரயிலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கிறது. ஆனால் தினமும் கிட்டத்தட்ட 800 இருக்கைகள் காலியாக இந்த வண்டி செல்கிறது.
பொங்கல் தீபாவளி மற்றும் விடுமுறை காலங்களில் ஒரு இடம் கூட இல்லாமல் முழுமையாக நிரம்பி வழியும், இந்த வண்டி ஏழைகளுக்காக பிரத்தியேகமாக இயக்கப்படும் வண்டி. ஆனால் முன்பதிவு நடைமுறை தெரியாத காரணத்தால் ஏழைகள் இதை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்.
இது நமக்கான வண்டி. இதை நாம் பயன்படுத்தாமல் விட்டால் எதிர்காலத்தில் இதை ரத்து செய்து வட மாநிலங்களுக்கு திருப்பி விடவும் வாய்ப்பு உள்ளது.
எனவே நமது உரிமையை இழக்காமல் இந்த வண்டியை பற்றி அறியாத மக்களுக்கு கொண்டு செல்லுங்கள்.