புருவ அழகை கூட்ட சில டிப்ஸ்..!!
பல பெண்களின் கண் அழகை எடுத்துக்காட்டுவது அவர்களின் புருவங்கள் தான்.., கண்கள் கவர்ச்சியாக இருந்து புருவங்கள்.. அழகாக இல்லை என்றால் சற்று முக அழகை கெடுப்பது போன்று இருக்கும்.
ஆனால் அந்த அழகை இயர்கையாகவே கொண்டு வர முடியும், அதற்கான சில டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
* தினமும் இரவில் தூங்குவதற்கு முன் விளக்கு எண்ணெய் புருவத்தில் தடவி.., 2-3 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.
* ஐ புரோ பென்சில் பயன் படுத்துபவர்கள்.., பென்சிலை விளக்கெண்ணெயில் தொட்டு புருவத்தில் வரைந்து வந்தால்.., பருவம் வேகமாக வளரும்.
* சற்று சூடேற்றிய தேங்காய் எண்ணெய் புருவத்தில் தடவி மசாஜ் செய்யலாம்.
* 2 சின்ன வெங்காயத்தின் சாறை எடுத்து.., அந்த சாறை பஞ்சில் நனைத்து புருவத்தில் தடவி வந்தால் வேகமாக முடி வளரும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post