மாதவிடாய் வலியில் இருந்தது பெண்கள் விடுபட சில குறிப்புகள்..!!
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலி என்பது மிக கொடுமையானது நூற்றில் 10 பெண்கள் மட்டுமே அந்த வலியை கடந்து செல்கின்றனர். பல பெண்கள் அந்த வலியில் பெரிதும் அவதிப்படுகின்றனர். முக்கியமாக இளம் பருவ பெண்கள்.
கர்ப்பப்பை திசுக்களை கழிவாக வெளியேற்றும் பொழுது, கர்ப்பப்பை சுருங்கி விரியும். அந்த நேரத்தில் புரோஸ்டோ கிளாண்டின் எனப்படும் ஹார்மன் அதிகம் சுரப்பதால் இந்த வலி ஏற்படுகிறது.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை முழுவதுமாக சரி செய்வது முடியாத ஒன்று ஆனால் அதை குறைப்பது மிக சுலபம்.
* மாதவிடாய் காலத்தில் மிக முக்கியமான ஒன்று ஓய்வு. எந்த அளவிற்கு ஓய்வு எடுகின்றமோ அந்த அளவிற்கு வலி குறையும்.
* கடினமான வேலைகள். மாதவிடாய் காலத்தில் தண்ணீர் குடம் தூக்குவது, அதிக மாடி படி ஏறி இறங்குவது, அதிக வெயிட் உள்ள பொருட்களை தூக்குவது போன்ற வேலைகளை தவிர்ப்பது நல்லது.
* வைட்டமின் பி, மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற உணவு பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* முருங்கை கீரை, ஆட்டின் ஈரல், போன்ற வற்றிற்கு இரும்புச்சத்து அதிகம். பாதம், முந்திரி, கீரைகள் மற்றும் மீன் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம், வலி குறையும்.
* சர்க்கரை சத்து குறைவாக உள்ள டார்க் சாக்லேட் எடுத்துக் கொண்டால் வலியை குறைக்க உதவும்.
* உடற்பயிற்சி செய்ய நினைப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்து உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற பல மருத்துவக் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி