நீங்கள் பார்க்க மறந்த சில முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகளவறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பெண்ணின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவலர்கள் நடத்திய விசாரணையில் அப்பெண் திருநகரம் பகுதியை சேர்ந்த அனுசியா தேவி என்பதும், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
சென்னை மேடவாக்கம் சோழிங்கநல்லூர் செம்மொழி பிரதான சாலை அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிர் இழந்த வெங்கடேசனுக்கு திருமணம் ஆகி 3 மாதங்களே ஆனது குறிப்பிடதக்கது.
காரைக்கால் அரசு வேளாண் கல்லூரி மாணவர்களே இயற்கை முறையில் விளைவித்த பாரம்பரிய நெல் ரகங்களை களத்தில் இறங்கி அறுவடை செய்து மகசூல் ஈட்டியுள்ள நிலையில் காரைக்கால் மாவட்ட விவசாயிகளும் தங்களது நிலங்களில் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விளைவித்து நல்ல மகசூலும், லாபமும் ஈட்டலாம் என வேளாண் கல்லூரி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கசக்கால்வாயில் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், ஜேசிபி மற்றும் லாரி உதவியுடன் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மணல் அள்ளி பதுக்கி வைக்கப்படுவாதல் கல்லூரி விடுதியின் மதில் சுவர் உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடுபவரை கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..