உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிராமத்தை சேர்ந்த வீராச்சாமி என்பவரது மகள் சத்யா பிறவிலேயே பார்வை இழந்தவர். இவருக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மதிஒளி என்ற இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தாய் தந்தை இழந்த நிலையில் மாற்று திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து பேசிய சத்யா, சிறு வயதில் இருந்தே தான் கஷ்டத்தை மட்டுமே கடந்து வந்த நிலையில், இது கனவா நிஜமா என தெரியவில்லை என பேசியது காண்போரின் மனதை உருகச்செய்துள்ளது.
மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஆதீனகர்த்தர் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் 10 விரல்களில் வைர மோதிரங்கள் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் படைசூழ சிவிகை பல்லக்கில் காட்சி கொடுத்தார். அதனை அடுத்து பட்டணப்பிரவேச விழா நடைபெற்றது. அப்போது திரளான மக்கள் தீபாரதனை காண்பித்து வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இயங்கி வரும் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகம் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர்.மீன் வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தற்காலிக பணியாளர்களாக 50க்கும் மேற்பட்டோர் பத்தாண்டுகளுக்கு மேலாக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் அடிப்படை சம்பளம் ஊதிய உயர்வு எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் நிரந்தர பணி வழங்க வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் சோளி பாளையம் ஆனந்தா அவன்யூ பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை அமைத்து தரக்கோரி பலமுறை நகராட்சியில் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால் வேதனை அடைந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்ட மக்கள் கணியம்பூண்டி – காவிலிபாளையம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சோழிபாளையம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..