36 லட்சத்தை ஆட்டைய போட மாஸ்டர் பிளான்..!! ஏடிஎம்மில் ஆட்டைய போட்ட நபர்..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனூர் பிகேபி நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சரண்ராஜ் (29) ஏசிஎஸ் செக்யூர் வேல்யூ பிரைவேட் லிமிட் கம்பெனி மூலமாக பல்வேறு ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு ஜோலார்பேட்டை கோடியூர் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்ப வங்கி ஊழியர்களுடன் பாதுகாப்பு வாகனத்தில் 36 லட்சத்தை எடுத்து வந்தனர்.
இந்த நிகழ்வை தங்களது நண்பர்களுக்கு தெரியப்படுத்தி ஏடிஎம்மில் பணம் நிரப்ப வருகிறோம் அதனை கொள்ளையடிக்க வேண்டும் என சரண்ராஜ் திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதன் காரணமாக தனது இரண்டு நண்பர்களை செட்டப் செய்து தயார் நிலையில் கோடியூர் பகுதியில் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக பணத்துடன் பாதுகாப்பு வாகனத்தில் வங்கி ஊழியர்கள் வந்தனர்.
வாகனத்தை ஏடிஎம் மையம் முன்பு நிறுத்தி விட்டு ஒரு பையில் ரூ.36 லட்சத்துடன் ஏடிஎம் மையத்துக்கு நுழைய முயன்றனர்.அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில் சரண்ராஜின் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் முகத்தையும் மறைத்தவாறு பணப்பையை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர்.
அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பணப்பையை தூக்கி வீசிவிட்டு இருசக்கர வாகனத்தை அங்கேயே வீட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அதன் பின்னர் அந்த பணப்பையை வங்கி ஊழியர்கள் மீட்டனர். இது குறித்து வங்கி ஏடிஎம் ஆப்ரேட்டர் தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் பாதுகாப்பு வாகனத்தில் வந்த நபர்களை ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் பதில் அளித்த சரண்ராஜ் மீது போலீஸார் கண்ணோட்டம் திரும்பிய நிலையில் அவரை விசாரணை மேற்கொண்டதில் தன்னுடைய மாஸ்டர் பிளான் காரணமாகத்தான் தனது நண்பர்களை வைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக சரண்ராஜை ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்தனர் மேலும் தப்பி ஓடிய சரண்ராஜ் நண்பர்கள் இருவரை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர். மேலும் சரண்ராஜ் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..