நீங்கள் பார்க்க மறந்த சில முக்கிய செய்திகள்..!!
அசோகர் அம்பேத்கர் தம்ம யாத்திரை ரதம் கேரளா மாநிலத்தில் தொடங்கி மகராஷ்டிரா மாநிலம் தீக்ஷா பூமியில் 21 நாள் யாத்திரையாக சென்று முடிவடைகிறது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தம்ம யாத்திரை ரதத்திற்கு புரட்சி பாரதம் சோளிங்கர் ஒன்றிய தலைவர் சுந்தர் தலைமையிலும் இந்திய குடியரசு கட்சித் தலைவர் இளையராஜா முன்னிலையிலும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் அசோகர் சிலைக்கும் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தில் இளம் வயதினரிடையே இருதய நோய் அதிகரித்து வருவதாக இருதயவியல் துறைத் தலைவர் மருத்துவர் கணேசன் பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர் தற்போதைய நிலையில், சமச்சீரான உணவு, தவறாத உடல்பயிற்சி, மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றுக்கு இளைஞர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். பழங்கள், காய்கனிகள், முழு தானியங்கள், கொழுப்பற்ற புரதங்கள் ஆகியவற்றை உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
திருப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போயம்பாளையம் பகுதியில் கடந்த 2 தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட பணம் கேட்டு மிரட்டி கணபதி என்பவருடைய உணவகத்தை சூறையாடிய வழக்கில் கார்முகிலன், சதீஷ் என்ற இருவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இருவரையும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..