உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!
நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பு :
தருமபுரி அடுத்துள்ள அதியமான்கோட்டையில் நவராத்திரி கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் தயார் செய்யப்படும் கொலு பொம்மைகளை வாங்குவதில், தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலமான கர்நாடக மாநில வியபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேலூர்மாவட்டம் தொரப்பாடியில் உள்ள கால்நடை பரமாரிப்புதுறையின் சார்பில் அங்குள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வெறிநோய் தடுப்பூசி முகாமில் வளர்ப்பு நாய்களுக்கு இலவசமாக ஊசிகள் போடப்பட்டது.
இம்முகாமினை கால்நடை மண்டல இணை இயக்குநர் கோபிகிருஷ்ணா துவங்கி வைத்தார். இதில் பன்முக மருத்துவமனையின் பிரதம மருத்துவர் பாண்டியன், உதவி இயக்குநர் அந்துவன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் இரவு நேரங்களில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில் 32 லட்சம் ரூபாய் மதிப்பில் 120 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனை அடுத்து சிசிடிவி கேமராக்களை இணைத்து ஒரு ஆண்டுக்கு பிறகு பராமரிப்பு செய்வதாக கூறி சிசிடிவி கேமராக்கள் கழட்டி எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதால் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் மற்றும் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமை காங்கிரஸ் நகர தலைவர் பரத் தலைமை தாங்கினார்.
இதில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.மேலும் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..