முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த சில முக்கிய முடிவுக்கள்..!! நிறைவு பெற்ற அமைச்சரவை ஆலோசனை கூட்டம்..!!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஆலோசனை கூட்டம் இன்று காலை 11மணிக்கு தொடங்கியது..
வருகின்ற ஆகஸ்ட் 27ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அரசு பயணமாக அமெரிக்கா சென்று தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்துறைகள் கொண்டு வருவதற்காக பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக அரசின் விதிமுறை அடிப்படையில் முதலமைச்சர் வெளிநாடு செல்லும் போது அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படுவது அவசியம். அதன் அடிப்படையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. மேலும் முதலமைச்சர் பயணத்திற்கான ஒப்புதலை தமிழ்நாடு அமைச்சர்கள் வழங்கினார்கள்.
இந்த அமெரிக்கா பயணத்தின் போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அதே போல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரிகள், பிற தொழில்நுட்ப நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து உலக முதலீட்டாளர்களுக்கான மாநாடு இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. அதில் 6 லட்சத்து 63 கோடியில் தமிழகத்தில் தொழிற்முதலீடுகள் ஈர்க்கப்படவுள்ள நிலையில் தொழில் நிறுவனங்களுக்கான ஒப்புதல், விரிவாக்க பணிகளுக்கான ஒப்புதல்., குறித்து இன்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது..
பல்வேறு நாட்டில் அரசு பயணம் மேற்கொண்டிருந்தாலும் தற்போது அமெரிக்க பயணம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும்., அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன் கூட அமைச்சர் ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது, வருகின்ற ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு மேல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்கலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தினார். அவரை தொடந்து அமைச்சர் கீதா ஜீவனும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று அங்கீகரித்துப் பேசியிருந்தார்..
எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கா செல்லும் இந்த சூழலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படுமோ என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.. இது குறித்த முடிவும் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என பலரும் எதிர் பார்த்திருந்த நிலையில் அதைப்பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் பேசாதது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..