பயங்கரவாதிகள் தாக்குதலால் இராணுவ வீரர்கள் மரணம்..!!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியின் அஹ்லான் ககர்மண்டு வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் பாதுகாப்பு துறை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் வீர மரணமடைந்தனர். கதுவா மாவட்டத்தில் கடந்த ஜூலை 8-ஆம் தேதி ராணுவ வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், தொடர்புடைய 4 பயங்கரவாதிகள் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.20 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. ராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்த இத்தாக்குதலில், பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிழல் இயக்கமான ‘காஷ்மீர் புலிகள்’ அமைப்பின் பயங்கரவாதிகள் 4 பேருக்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த நால்வரின் வரை படங்களை காவல்துறையினர் வெளியிட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..