பானை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா…!
இந்த காலகட்டத்தில் சுத்தமான தண்ணீர் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு நாம் வந்து விட்டோம். ஆனால் அந்த தண்ணீரும் எவ்வளவு சுத்தமானது என்பது நம் கண்ணுக்குத் தெரியாது.
காசு கொடுத்து வாங்கினால், அது நன்றாக இருக்கும் என்று குடிப்போம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து குடிப்பார்கள். மண்பானை என்பது பல ஃபில்டருக்கு சமம். ஆனால் மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்தால் தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருட்களையும் மண்பானை உறிஞ்சி, நீரை சுத்தப்படுத்திக் கொடுக்கும்.
உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்டர் பில்டர் மண்பானை தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் உடலில் பலவிதமான நன்மைகள் ஏற்படும்.
அதில் உள்ள தாதுக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும். பிரிட்ஜிக்கு பதிலாக பானையில் நீரை குடித்தாலே குளிர்ச்சியாக இருக்கும்.
தண்ணீரின் சுவையும் நன்றாக இருக்கும். எனவே இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் கோடை காலத்தில் குளிர்பானங்களையும் பிரிட்ஜ் தண்ணியையும் பயன்படுத்தாமல், மண்பானை தண்ணீரை குடித்து உடலுக்கு ஆரோக்கியத்தை தேடிக் கொள்வது நல்லது.
புதிதாக மண்பானை வாங்கி முதலில் ஊற்றும் தண்ணீரை குடிக்கக்கூடாது. தண்ணீரை ஊற்றி, ஒரு வாரம் ஊற வைத்து, கழுவி விட்டு பின்னர் புதிய நீரை ஊற்றி குடிக்கலாம். வெயில் காலத்தில் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க மண்பானை தண்ணீர் மிகவும் சிறந்தது.
பானைத் தண்ணீரில் நோய் எதிர்ப்பு சக்திகள். இருக்கும் தீராத தாகத்தையும் ஒரு டம்ளர் தண்ணீர் தீர்த்து விடும். பானை தண்ணீரை குளிர்ச்சியாக குடித்தாலும் இருமல், தொண்டை வறட்சி, சளி போன்ற எந்த பிரச்சனைகளும் ஏற்படாது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் .
– நிரோஷா மணிகண்டன்