தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா..? திருமாவளவன் நச் பதில்..!!
திருப்பூர் விபத்தில் உயிரிழந்த மகளிர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் காளியாதேவி வீட்டிற்கு வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் வந்து அவரது திருவுருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு நிதி அளித்து ஆறுதல் கூறினார்…
மகளிர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் காளியாதேவி கடந்த சில நாட்கள் முன்பு விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவை ஒட்டி திருப்பூர் அருகே பொங்குபாளையத்தில் உள்ள காளியாதேவி இல்லத்திற்கு வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் வருகை தந்து காளியாதேவியின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தலில் கலந்து கொண்டார்.
மேலும், அவரது குடும்பத்தாருக்கு 70 ஆயிரம் ரூபாய் நிதி அளித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் 2026 ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கோவை போஸ்டர் குறித்த கேள்விக்கு அது ஒன்றும் தவறில்லையே, 1999-ல் இருந்து அதை நாங்கள் பேசி வருகிறோம் கூட்டணியில் அங்கம் வகித்து தான் திமுக விடம் கேள்வி கேட்கிறோம். அவர்களையும் மாநாட்டுக்கு அழைத்துள்ளோம்.
விஜய் திராவிட சித்தாந்தத்தை முன்னெடுத்திருப்பது திராவிட கட்சிகளுக்கு பாதிப்பாக பார்க்கவில்லை, மாறாக பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அவரது வரவு இருப்பதாக பார்க்கிறேன்.
விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு நாங்கள் ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ளோம். என பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..