தீபாவளி அன்று வெளியான பிரின்ஸ் திரைப்படம் சிவகார்திகேயனுக்கு மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதனால் மிகுந்த சோகத்தில் இருந்தா சிவகார்த்திகேயன் அடுத்த படமான மாவீரன் தோல்வி படமாக அமைந்துவிட கூடாது என்று மிக கவனமாக செயற்பட்டு வருகிறார்,
இதனால் மாவீரன் படப்பிடிப்பில் சில காட்சிகளை மாற்ற வேண்டும் என்று இயக்குனரை வற்புறுத்தி வந்ததாக தகவல் வந்தது. இதனை இயக்குனர் அஸ்வின் அதை மறுத்து கதையில் இருப்பதை நடிக்க சொல்லியதாக தெரிகிறது, இதனால் கோவத்தில் இருந்த சிவகார்த்திகேயன் படப்பிடிற்கு வராமல் இருந்ததால் படப்பிடிப்பு தடைபெற்றது. சென்னையில் பெய்து வரும் கனமழையால் தான் படப்பிடிப்பு தடை பெற்றுள்ளது என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் இயக்குனர் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே கருத்து வேறுபாட்டால் தான் படப்பிடிப்பு நின்றுள்ளது, பிறகு .லோகேஷ் கனகராஜும் மடோனா அஸ்வினும் நண்பர்களாக இருந்துள்ளதால் லோகேஷ் சிவாவிடம் சென்று அஸ்வின் மீது நம்பிக்கை வையுங்கள் உங்களுக்கு இது கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என்று கூறி சிவகார்த்திகேயனை சமாதானபடுத்தி படப்பிடிப்பை துவங்கி வைக்க உதவி செய்துள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.