தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி சத்யபரதா சாகு. வாக்காளர் பட்டுயலில் இன்று முதல் புதிய வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்யலாம்.
செய்தியாளர்களை சந்தித்த தலைமை தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டில் ஆண்களின் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,03,95,103 கவும் பெண்களின் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,14,23,321 மற்றும் 7,758 பேர் மாற்று பாலின வாக்காளர்களாக உள்ளனர். என்று அறிவித்தார்.
மேலும்,அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்றும் மாநிலம் முழுவதும் 17.69 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவதார். இதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்தார்.