தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் முதல் சர்தார் வரை வர தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த ஒரே ஆண்டில் மூன்று வெற்றி படங்களை கொடுத்து அசைக்க முடியாத நாயகனாக மாறியுள்ளார்.
இந்நிலையில் கார்த்தி அடுத்து நடிக்கும் அவரின் 25வது படத்தின் வேலைகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திற்கு ஜப்பான் என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தை ராஜு முருகன் இயக்கவுள்ளார் இதற்குமுன் இவரது இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. ஜப்பான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க இருக்கிறார், கூடுதலாக டைரக்டர் விஜய் மில்டன், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
ஏற்கனவே கார்த்தி பட வரிசையில் பொன்னியின் செல்வன் 2, கைதி 2, சர்தார் 2 என்று அடுத்தடுத்து படங்கள் வரவுள்ள நிலையில் அவரின் 25 வது படத்தை குறித்தான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
பொன்னியின் செல்வன் 2 வரும் கோடையில் வெளியாகும் என்பது இயக்குனர் மணிரத்தினம் அறிவித்தார். இதனால் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தை முடிந்துவிட்டதால் அடுத்து நடிக்கும் படங்களின் அப்டேட்க்கள் தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.